டிச. 2-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும்: மாநில தேர்தல் ஆணையம்

Nov 18, 2019 02:49 PM 584

டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும் என உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார். டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Comment

Successfully posted