திருப்பூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள்

May 16, 2019 01:16 PM 97

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 188 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட சதுரங்க சங்கமும் எம்.எஸ்.ஆர் குழுமமும் இணைந்து முத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்திவரும் சதுரங்க போட்டிகளில் 132 வீரர்களும், 56 வீராங்கனைகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 132 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 56 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெறும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அந்தப் பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு போட்டியாளர்கள் தேசிய அணிக்காக விளையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Comment

Successfully posted