சென்னையில் நடைபெற்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

Dec 05, 2019 05:26 PM 502

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங் தலைமையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 

கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஐஜி அன்பு, எஸ்.பி. ராஜேஸ்வரி மற்றும் அனைத்து மாவட்ட சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் விசாரித்த வழக்குகள் எவை மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு, பொன்.மாணிக்கவேல் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Comment

Successfully posted