வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்: காவல்துறை விசாரணை

Dec 15, 2019 04:45 PM 684

தெலங்கானாவில் 20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஐதராபாத் சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் உள்ள காய்கறிச் சந்தையில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted