4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு

Feb 17, 2020 10:26 AM 149

சென்னையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் மற்றும் குறுந்தகட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டு, முதலமைச்சரை வாழ்த்தினர்.

Comment

Successfully posted