ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: திங்கட்கிழமை தீர்ப்பு

Feb 17, 2019 06:42 PM 369

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை, யூகங்களின் அடிப்படையிலானது என்று தமிழக அரசு வாதிட்டது. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரியிருந்தது.

அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆலை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அனைத்து வழக்கு விசாரணைகளும் கடந்த 7 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

Comment

Successfully posted