ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்

May 06, 2021 02:04 PM 766

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆலையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைதொடர்ந்து தினமும் 24 மெகாவாட் மின்சாரம் வழங்கவும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது. 

சுழற்சி முறையில் பணி செய்வதற்காக 250 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்களை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஒருசில நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Comment

Successfully posted