இப்படியும் உன்னை அவுட் செய்வேன்: டி வில்லியர்ஸை கலாய்த்த ஸ்டெயின்

Dec 04, 2019 08:23 PM 1109

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றும் வரும் 20 ஓவர் லீக் ஒன்றில் விளையாடி வரும் ஸ்டெயின், டிவில்லியர்சிடம் செய்த கலாட்டா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20 ஓவர் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், தென்ஆப்பிரிக்காவில் 6 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஜான்சி சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை கேப் டவுன் பிலிட்ச்- சவேன் ஸ்பார்டன் ஆகிய இரு அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் பிலிட்ச் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து, சவேன் ஸ்பார்டன் அணி சார்பில் களமிறங்கிய வீரர்கள் 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் கேப் டவுன் பிலிட்ச் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே போட்டியின் போது, கேப் டவுன் பிலிட்ச் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 14-வது ஓவரை வீசினார். அப்போது, பேட்டிங் முனையில் இருந்த டி-வில்லியர்ஸ் பந்தை நேராக அடிக்க, அது ஸ்டெயின் கையில் பட்டு திரும்ப அவரிடம் சென்றது. உடனே, கீழே இருந்த பந்தை எடுத்த கொடுத்த வில்லியர்ஸை, ரன் அவுட் செய்யும் விதமாக ஸ்டெம்பை நோக்கி அடித்து நடுவரைப் பார்த்து கையைத் தூக்கி ரன்அவுட் கேட்டு விளையாடினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், அதே ஓவர் முடிவில் வில்லியர்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றார்.

Courtesy

 

Comment

Successfully posted