நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்- அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

Sep 21, 2019 07:41 PM 86

பொதுத்துறை வங்கி இணைப்பை கைவிட கோரி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளை நிதி அடிப்படையில் வலுப்படுத்தும் நோக்கில் 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 26, 27ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன், வங்கி இணைப்பால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். இதனை கைவிடக்கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted