மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

Oct 11, 2021 06:10 PM 2979

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர், தொடர் தோல்வியால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, தென்றல்நகர் பகுதியை சேர்ந்த சவுந்திரபாண்டி என்பவரது மகன் மகேந்திரன், தனியார் கல்லூரியில் முதுகலையில், முதலாமாண்டு பயின்று வந்தார்.

அவர், தனது செல்போனில் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதில், தொடர்ச்சியாக தோல்வி ஏற்பட்டதாகவும், இதனால் பெருமளவிலான பணத்தை இழந்ததாகவும் தெரிகிறது.

இதனால் மகேந்திரனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த கல்லூரி மாணவர் மகேந்திரன், வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted