பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

Jan 19, 2022 03:56 PM 1789

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோவளத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயது சிறுமி 11ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி வயிற்று வலியால் அவதிபட்ட நிலையில் பெற்றோர் அவரை திருவண்ணாமலைக்கு அழைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் வசித்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாகன ஓட்டுநர் அரிபிரசாத், சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்த நிலையில், போக்சோ மற்றும் மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய சட்டங்களில் அரிபிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே சிறுமி கர்ப்பமான விவரத்தை அறிந்தும் அதனை மறைத்து ஊருக்கு அனுப்பியதாக பள்ளி தலைமையாசிரியர் குமரகுருபரன், விடுதி காப்பாளரும் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted