பள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

Aug 13, 2020 04:49 PM 267

பள்ளிகளில் சேர்க்கைகாக வரும் மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் ஏழூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியில் சேருவதற்காக, பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ் மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். மாணவர் சேர்க்கை மட்டுமே தற்போது நடைபெறும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted