அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வந்தவாசியில் மாணவிகள் ஊர்வலம்

Oct 15, 2018 05:09 PM 673

தமிழகம் முழுவதும் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் மாணவிகள் கலந்து கொண்ட இந்த எழுச்சி ஊர்வலத்தை வந்தவாசி வட்டாட்சியர் அரிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் கலாமின் வழி நடப்போம், கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம், மரம் நடுவோம், மழை பெறுவோம் என முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted