மதுஅருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு நூதன தண்டனை

Aug 13, 2019 06:33 PM 63

மதுஅருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர் மீது போதையில் கல்லூரிக்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 8 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் 3-ம் ஆண்டில் தொடர அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 3-ம் ஆண்டில் வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி 8 மாணவர்களும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுதாரர்கள் சுதந்திர தினத்தன்று, விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணிகளையும், பார்வையார்களுக்கு உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மாலை 4 முதல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இது சரியாக நடக்கிறதா என்பதை கண்காணித்து, ஆகஸ்ட் 19ம் தேதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Comment

Successfully posted