மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்ட மாணவர்கள்

Jan 24, 2020 07:25 AM 182

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கடல் பயணம் மேற்கொண்டு மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டனர்.

மாணவர்கள், புத்தகத்திலுள்ள பாடங்களை படித்து வந்தாலும் வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை தெரிந்துக்கொள்ள பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயம் மற்றும் கிராமப்புற மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்து தெரிந்துகொள்ள மாணவர்கள் களத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதன்படி நாகை மாவட்டத்தில் இயற்கையுடன் போராடும் மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளும் வகையில், மாணவர்கள் கடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது மீன் பதப்படுத்துதல் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை முறை தொழில்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Comment

Successfully posted