கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது

Feb 26, 2020 02:44 PM 549

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் நாட்டை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சிதம்பரம் அருகே உள்ள சித்தலப்பாடி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 சொகுசு கார்களில் வெளிநாட்டினர் 4 பேர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்கள் விசாரித்ததால் 2 சொகுசு கார்களையும் விட்டு விட்டு 4 பேரும் தப்பியோடி விட்டனர். விசாரணையில், கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரின் கார் என்பதும், அந்த கார் கர்நாடகாவில் திருடப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் கிராஸ் பிரான்சிஸ், எலியா அமின் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எலியா, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted