இந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு

Feb 20, 2020 07:46 AM 531

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணியின்போது, திடீரென கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில், உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கான செட் அமைக்கும்பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இயக்குநர் சங்கரின் உதவியாளர் மது, உதவி உயக்குநர் கிருஷ்ணா மற்றும் சந்திரன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 10 பேர் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted