பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம்: திமுக தொண்டர் மீது வழக்குப்பதிவு

Apr 15, 2019 12:20 PM 119

பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் திமுகவை சேர்ந்த வரதராஜன் என்பவர் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் திமுகவை சேர்ந்த வரதராஜன் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பணப்பட்டுவாடா குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணப்பட்டுவாடா செய்தது உறுதியானதையடுத்து, திமுகவை சேர்ந்த வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க குனியமுத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Comment

Successfully posted