முதல் குழந்தை இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

Oct 19, 2018 06:56 PM 591

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உட்பட மூவர் தற்கொலை செய்து கொண்டனர்.

அமணாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் திருவேங்கடம். சுய தொழில் செய்து வந்த அவருக்கு நிக்கேஷ், மாதேஷ் என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் முதல் குழந்தை நிக்கேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளான். இதனால் சோகத்தில் இருந்த குடும்பத்தினர், நிக்கேஷின் பிறந்த நாளைத் தொடர்ந்து முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சோகத்தில் இருந்து மீளாத நிலையில், மூவரும் நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலையில் இதனைக் கண்ட உறவினர்கள் கூச்சலிட்டனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comment

Successfully posted