"வலியற்ற மரணத்திற்கான கருவி"-சுவிட்சர்லாந்து அரசு அனுமதி

Dec 08, 2021 06:41 PM 10220

எக்ஸிட் இன்டர்நேசனல் என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவன அமைப்பின் இயக்குநர் டாக்டர் பிலிப் நிட்சிட்சே. இவர் "டாக்டர் டெத்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் மனிதர்கள் தற்கொலை செய்து கொல்லும் இயந்திரத்தை வடிவமைத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாக உள்ளது. ஆனால், சில நாடுகள் தற்கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது.

தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான வேதனை, வலியுடன் உயிர் வாழ்வதற்குப் பதிலாக, தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் அனுமதிக்கிறது.

இந்த டாக்டர் டெத் இயந்திரம் பற்றிய தகவல்களை அளித்த தயாரிப்பு நிறுவனம், தற்கொலை செய்து கொள்ளும் நபர் இந்த மெஷினில் உள்ளே உட்கார்ந்த பின்னர் இயந்திரமானது உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்பிய பின்பு, ஆக்ஸிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது.

உள்ளிருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்று விடுவர். இதெல்லாம் 30 வினாடிகளில் நடக்க, அடுத்த 5 நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுகிறது.எந்தவித அச்சமும் இல்லாமல், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை நிகழ்த்துகிறது.


அந்த மிஷினில் கல்லறை பெட்டி பொறுத்தப்பட்டுள்ளது.உயிர் பிரிந்தபின்பு மேலே உள்ள கல்லறை கேப்சூலை தனியாக எடுத்து இறுதி சடங்குகளை நடத்த முடியும். இந்த மிஷினை பயன்படுத்த விரும்புபவர்கள் அவர்கள் விரும்பும் இடத்திற்கு இதை கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.

சுவிட்சர்லாந்தில் கடந்த ஒராண்டில் மட்டும் 1300 பேர் அங்கீகரிக்கப்பட்ட தற்கொலைகள் அல்லது கருணைகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இந்த மிஷின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷினிற்கு சார்கோ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட கருணைக்கொலைக்காக பயன்படுத்துவதில் பிரச்னையில்லை,இருப்பினும் தற்கொலை எண்ணங்களை மக்கள் மத்தியில் இன்னமும் எளிதாக்கிவிடுமோ! என்ற ஐயமும் எழுகின்றது.

Comment

Successfully posted