எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தொடரும் மாணவர்களின் தற்கொலை

Jul 17, 2019 10:19 PM 89

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அண்மை காலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் தங்கி பயின்று வந்த அனுப்பிரியா என்ற மாணவி, கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அன்று, 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த நாளே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித் சவுத்ரி, கல்லூரி மாணவர் விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து கல்லூரி மாணவர்கள் மீளாத நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியை சேர்ந்த தர்ஷன் என்ற மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இந்த மூன்று நபர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted