சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்

Feb 17, 2020 12:51 PM 834

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்தார்.  கவர்ச்சி வேடங்களில்  இளைஞர்களின் கனவு கன்னியான சன்னி லியோன் வலம் வருகிறார்.

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன்,  தற்போது ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  எண்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், சன்னி லியோன் இந்தியில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க காமெடி தொடர் என கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சன்னி லியோன் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதனை சன்னி லியோன் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Comment

Successfully posted