தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Aug 02, 2018 12:27 PM 917

மருத்துவ படிப்பில் தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழகத்தில் மட்டும், 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு   உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Comment

Successfully posted

Super User

hi