உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Aug 09, 2018 03:53 PM 857

தமிழக மலைப் பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டடங்கள் கட்டியுள்ளதாகவும், இவற்றை அகற்ற உத்தரவிடக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணையில், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள 400 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனவிலங்குகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அனுமதியின்றி செயல்பட்டு வரும் விடுதி மற்றும் உணவகங்களுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆணையிட்டனர்.

Comment

Successfully posted