நாஞ்சில் விஜயனை சூர்யாதேவி தாக்கியதாக புகார்!

Oct 12, 2020 09:29 PM 1113

சென்னை வளசரவாக்கத்தில் சின்னத்திரை நடிகர்களை வீடு புகுந்து தாக்கியதாக சூர்யா தேவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயன் நேற்று இரவு யூடியூப் நிகழ்ச்சிக்காக சென்னை வளசரவாக்கத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது சூர்யாதேவி ஆட்களுடன் சென்று படப்பிடிப்பில் இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் வனிதாவுக்கு ஆதரவாக இருந்ததால், சூர்யா தேவி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் புகார் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted