சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் வெளிநாடு சுற்றுப்பயணம் -குவைத் ,கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் சந்திப்பு

Oct 29, 2018 08:33 AM 419

4 நாள் சுற்றுப் பயணமாக கத்தார் மற்றும் குவைத்துக்கு சென்றுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசு முறை பயணமாக கத்தார் சென்றடைந்தார். அவரை அந்நாட்டு இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், செவ்வாய்க்கிழமை குவைத் செல்லவுள்ளார்.

அங்கு 31-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வர்த்தகம் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


Comment

Successfully posted