நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் வெறிச்செயல்....

Sep 17, 2021 09:41 PM 946

சென்னையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனமொழி 20 வயதான இவருக்கு 35 வயதாகும் சுப்ரமணி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. 

இந்நிலையில் சுப்ரமணி, தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரை தினந்தோறும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கனிமொழி, தனது குழந்தையை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

சில நாட்களுக்கு முன் கனிமொழியின் தாய் நிர்மலா நடத்தி வரும் பழக்கடைக்கு சென்ற சுப்ரமணி, மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கு நிர்மலா மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. எனினும் சுப்ரமணி வீடு மற்றும் கடைக்கு சென்று விடாது அவருடன் தகராறில் ஈடுபட்டள்ளார். 

இந்நிலையில் 17 ம் தேதி காலை கனிமொழியின் வீடு புகுந்த சுப்ரமணி, தூங்கி கொண்டிருந்த அவர் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். 

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதி வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

Comment

Successfully posted