நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதி பலி

May 15, 2019 12:56 PM 95

பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த அவர் விடுமுறைக்காக சென்னை வந்தார்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதிய விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீச்சல் வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted