திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

Feb 20, 2020 06:14 PM 1400


மயிலாடுதுறையில், பிரபல தவில் வித்வான் திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

தமிழ் இசையுலகில் தவில் இசைப்பதில் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர், கலைமாமணி  திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி. தவில் இசையில் இவரது தனித்திறமையை கெளரவப்படுத்தும் விதமாக  தமிழக அரசு கலைமாமணி விருதும், மத்திய அரசு சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கியுள்ளது.

இவர் தவில் இசையில் சாதனைகள் படைத்து பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில்,  திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி நேற்று மாரடைப்பால் காலமானார். மயிலாடுதுறையில் உள்ள டி.ஏ.கலியமூர்த்தியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இசை கலைஞர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted