டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு

Sep 09, 2021 08:28 AM 3919

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியல் பங்கேற்கும் இந்திய அணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன் , ஹர்திக் பாண்ட்யா, ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted