ட்விட்டரில் ட்ரெண்டாகும் THALA60POOJADAY...

Oct 18, 2019 12:53 PM 743

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, தல 60 திரைப்படமும் இருவரின் கூட்டணியில் உருவாக உள்ளது.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்தில் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் தல 60 படத்தின் பூஜை நாளை நடைபெறுவதாக அஜித் ரசிகர்கள் சிலர் THALA60POOJADAY என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர்.இப்படி தல 60 திரைப்படம் பற்றி தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் வயதான தோற்றமான salt and pepper லுக் இல்லாமல், இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted