ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக ரூ. 4,109 கோடி நிதி ஒதுக்கீடு

Feb 14, 2020 05:47 PM 600

ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக 4,109.53 கோடி ரூபாய், 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மக்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியிலிருந்து 2,018.24 கோடி ரூபாய் அவர்களின் கல்வி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு வங்கியின் உதவியுடன் 106.29 கோடி ரூபாய் மொத்த செலவில் 223 ஆதி திராவிடர் நலப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் 8 ஆயிரத்து 803 குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 395 கோடி ரூபாய், அடிப்படை வசதிகளான தெரு விளக்குகள், அணுகு சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்காக 3 ஆண்டுகளாக பிரித்து வழங்கப்படும்.

Comment

Successfully posted