நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு

Feb 14, 2020 04:33 PM 273

2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 15,850.54 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம் 12,301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுமெனவும், முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான பணிகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,620 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரையில் உள்ள அவிநாசி சாலை நெடுகிலும் 10.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்க முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 5,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு 1,050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted