முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய பிரசாரம் பற்றிய விவரங்கள்!

Mar 17, 2021 07:21 AM 1876

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு திருவையாறில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும்,

காலை 10 மணிக்கு பாபநாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபிநாதனை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

காலை 11 மணிக்கு கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்தும் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 3 மணிக்கு நாச்சியார்கோவிலில், திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ் வீரமணியை ஆதரித்தும்,

மாலை 4 மணிக்கு குடவாசலில் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆ.காமராஜை ஆதரித்தும்,

மாலை 5.30 மணிக்கு மன்னார்குடியில் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கத்தை ஆதரித்தும்,

இரவு 7 மணிக்கு திருவாரூரில் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். 

Comment

Successfully posted