தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

Jan 18, 2019 06:23 AM 347

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

ஜனவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த டிசம்பர் 24 மற்றும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தொழில் நிறுவனங்கள் சிலவற்றை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

Comment

Successfully posted