தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது

Jan 19, 2020 09:12 AM 618

நாளை கூடவுள்ள  தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி இறுதி வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதையொட்டி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் நிதித்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தொடர்பாகவும், அதில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

Comment

Successfully posted