வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை

Apr 20, 2021 07:42 AM 166

வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மத தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோயில், தேவாலயம், மசூதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து மதத் தலைவர்களோடு, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், 35க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபடும் நேரங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted