தமிழகத்தில் பத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

Oct 09, 2019 09:31 PM 139

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ரத்னா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted