மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

Dec 08, 2018 05:08 PM 337

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 2 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளையும், உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted