பிரபல தொழிலதிபரின் காரை திருடி சென்ற டிரைவர்: 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

Dec 12, 2019 08:48 PM 378

சென்னையில், பிரபல தொழிலதிபரின் காரை திருடி சென்ற நபரையும், காரையும் 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு, பாராட்டு குவிகிறது.

சென்னை, ராயபேட்டையில் வசித்து வரும், ஹாட்சிப்ஸ் உரிமையாளர் வாசுதேவன், தனது காரில் புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட ஓட்டுநர் கார்த்திக் என்பவரோடு வடபழனியிலுள்ள போரம் மாலுக்கு சென்றுள்ளார். உரிமையாளரை போரமாலில் இறக்கி விட்ட கார்த்திக், ஐபோன் மற்றும் பணத்துடன் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளி வந்த வாசுதேவன் கார்த்திக்கை போன் மூலம் தொடர்பு கொண்ட போது, போன் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், ஐபோன் சிக்னலை வைத்து கார்த்திக்கை கேளம்பாக்கம், பெட்ரோல் பங்கில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

புகாரளித்து 2 மணி நேரத்திலேயே காரையும், பணத்தையும் மீட்டு கொடுத்த காவல்துறைக்கு, ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

Related items

Comment

Successfully posted