ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Apr 16, 2019 07:13 AM 221

கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால், அவர் மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டாலினிடம் கொடநாடு விவகாரம் குறித்து பேச வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியும் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் அவதூறு பேசி வருகிறார். தமிழக அரசின் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Comment

Successfully posted