திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கோஷம்

Sep 07, 2021 11:09 AM 1394

மின்துறை மானியக் கோரிக்கையின்போது, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் அறிவிப்பை வெளியிடக்கோரி, சென்னையில் ஒப்பந்த ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது.

இதனை நினைவூட்டும் விதமாகவும், மின்துறை மானியக் கோரிக்கையின்போது, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும், சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள, சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தரப்பு ஒப்பந்தப்படி தினக்கூலி 380ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Comment

Successfully posted