தமிழ்நாட்டில் புதிதாக 6 மாநகராட்சிகள்

Aug 24, 2021 05:44 PM 1091

தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னைக்கு அருகே உள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாகிறது.

அதன்படி, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாகிறது.

இதேபோல், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள், அதனைச் சுற்றி வளர்ச்சியடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, குன்றத்தூர், மாங்காடு, கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருச்செந்தூர், முசிறி உள்ளிட்ட 27 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகின்ற ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் அவர்களது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted