வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்

Apr 16, 2019 07:54 AM 67

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துவந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 2 பேரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிடிவி ஆதரவாளர்கள் 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள், குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இரண்டு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted