தேர்தல் அதிகாரிகள் சோதனை: பணத்தை கீழே போட்டுவிட்டு தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டம்

Apr 16, 2019 11:03 AM 44

தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணத்தை கீழே போட்டு விட்டு தினகரன் ஆதரவாளர்கள் தப்பியோடிய சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் அமுதா மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த சிலர், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய், வாக்காளர் பட்டியல், சின்னத்தின் மாதிரி படத்தை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். அவைகளை பறிமுதல் செய்து விசாரித்ததில், டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கைப்பற்றிய பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த்திடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Comment

Successfully posted