மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த டிவி மெக்கானிக் கைது

Dec 18, 2019 11:47 AM 952

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில் 11ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த டிவி மெக்கானிக்கை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

முடிவைத்தானேந்தலில் உள்ள டிவி மெக்கானிக் ராஜீவ், தனது வீட்டில் டிவி பார்க்க வந்த மாணவியைக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த மாணவிக்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு பிறந்த குழந்தையை புதைத்தது தொடர்பாகச் சிறுமியின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிவி மெக்கானிக் ராஜீவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Comment

Successfully posted