இந்தியா - சீனா ராணுவ கமாண்டோக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!

Jun 30, 2020 02:18 PM 1001

எல்லை பிரச்னைக்கு தீர்வுக் காணும் வகையில் இந்தியா, சீனா ராணுவ கமாண்டோக்கள் இடையிலான 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த 15 ஆம் தேதி லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்திய, சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. படைகளை விலக்கி கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்ட நிலையில், சீனா தனது படைகளை வாபஸ் பெறவில்லை. இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு ராணுவ கமாண்டோக்கள் இடையிலான பேச்சுவார்த்தை இந்திய எல்லைக்கு உப்பட்ட சூசல் பகுதியில் நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதல் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சீனாவின் மோல்டோ பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted