தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முழு உடல் நலத்துடன் உள்ளார்!

Oct 05, 2020 09:45 PM 1415

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் முழு உடல் நலத்துடன் உள்ளார்: தமிழக தலைமை காஜி அலுவலகம் அறிக்கை

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் இன்று மாலை உடல்நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் வேகமாக வதந்தி பரவியது. உடனடியாக இதை அறிந்த பல்வேறு மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் இது உண்மையான தகவலா என்று குடும்பத்தாருடன் கேட்கத் தொடங்கினர்.

சமூக வலைதளத்தில் வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்யின் குடும்பத்தினர் உடனடியாக தமிழக அரசின் தலைமை அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் சமூக வளைதளத்தில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் அந்த அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வதந்திகளை பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

Comment

Successfully posted