இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது

Feb 15, 2020 07:58 AM 252

தமிழகத்தின் 2020ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, தமிழ்நாட்டில், 6 கோடியே 13 லட்சத்து 6ஆயிரத்து 638 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேரும்,  பெண் வாக்காளர்க 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர்கள்   6 ஆயிரத்து 497  பேரும் உள்ளனர்.  இறுதி வாக்காளர் பட்டியல்களின் படி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்களுடன் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் குறைந்த அளவு வாக்காளர்களை கொண்டுள்ள தொகுதியாக உள்ளது.   18 வயது நிரம்பிய  புதிய வாக்காளர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

Comment

Successfully posted

Super User

மங்களம்