முதல் கூட்டத்திலேயே ரகசிய காப்பை மீறிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

May 12, 2021 04:19 PM 221

தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நடத்திய முதல் கூட்டத்திலேயே ரகசிய காப்பை மீறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், வனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யுவராஜ் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஆய்வு கூட்டத்திற்கு தொடர்பு இல்லாத திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ராமச்சந்திரனின் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

பொறுப்பேற்ற பின் முதன்முறையாக துறை சார்ந்த அதிகாரிகள் உடனான ஆய்வு கூட்டத்தில், தனது ஆதரவாளர்களை ராமச்சந்தின் அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted